எதிர்வரும் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் வாகனங்களின் விலைகள் வேகமாக உயரக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.
சுமார் 140 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையாகி வந்த Raize வகை வாகனம் மேலும் 8 முதல் 10 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என அவர் கூறினார்.
அதேபோல் Yaris வகை வாகனம் 4 முதல் 5 இலட்சம் ரூபாய் வரை உயரக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Vezel வகை வாகனம் சுமார் 12 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைமையின் அடிப்படையில் Land Cruiser வகை வாகனம் சுமார் 30 இலட்சம் ரூபாய் வரை உயரக்கூடும் என்றும் சங்கத் தலைவர் குறிப்பிட்டார்.
எளிமையாகச் சொல்வதானால், எதிர்வரும் இரண்டு முதல் மூன்று வாரங்களில் வாகன விலைகள் சுமார் 10 சதவீதம் வரை உயரக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




