web log free
April 06, 2026

'கோட்டாபய நிறுத்தப்படுவார் என்று நான் கூறவில்லை'

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ முன்னிறுத்தப்படுவார் என, தான் யாருக்கும் கூறவில்லை என, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், தான் கூறிய விடயத்தை ஊடகங்கள் வேறு விதமாக வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ முன்னிறுத்தப்படுவார் என, பசில் ராஜபக்ஷ கூறியதாக கடந்த வாரத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் வார இறுதி பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிட்ட பசில் ராஜபக்ஷ, அவ்வாறு தான் எந்தவித கருத்தினையும் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

Last modified on Saturday, 07 September 2019 12:43
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd