web log free
May 18, 2026

மேல் மாகாண ஆளுநர் பதவி விலகல்

மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப் தனது ஆளுநர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இன்று இடம்பெற்ற இந்த இராஜினாமா தீர்மானத்திற்குப் பிறகும், அவர் வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவராக தனது சேவையை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படும் வரை மேல்மாகாண ஆளுநராகவும் அவர் தொடர்ந்தும் பணியாற்றுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில மாதங்களுக்கு முன்பே தனது தீர்மானத்தை ஜனாதிபதியிடம் அறிவித்திருந்த ஹனிப் யூசுப், மாற்று நியமனம் நடைபெறும் வரை பதவியில் தொடருமாறு கோரப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd