இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை அதிகரிப்பதற்குத் தீர்மானித்துள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தையில் பால் மா விலைகள் அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டிலும் விலை அதிகரிப்பை மேற்கொள்ள நேர்ந்துள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்மா விலை ரூ. 50 இனாலும், 1 கி. கி பால்மா விலை ரூ. 125 இனாலும், அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
உலக சந்தை நிலைமைகள் மற்றும் நாணய மாற்று வீத நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அந்த சங்கம்,
இன்று (20) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு பால் மா விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.




