web log free
June 16, 2026

நாளை நான் கைதாகலாம் - விமல்

அண்மையில் ரணவீரு நினைவுச் சின்னம் அருகே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தான் கைது செய்யப்படலாம் என எதிர்பார்த்திருந்ததாக முன்னாள் அமைச்சர் விமல்  வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அந்த இடத்தில் கடமையில் இருந்த அதிகாரிகளின் பணிக்கு இடையூறு செய்திருந்தால், அதே நேரத்தில் தங்களை கைது செய்ய பொலிஸாருக்கு வாய்ப்பு இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், திங்கள்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளதாகவும், அன்றைய தினம் தாமும் தனது குழுவினரும் அங்கு செல்லவுள்ளதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd