web log free
June 05, 2026

2029இல் ஜனாதிபதி விமல்

2029 ஆம் ஆண்டில் தானும் இலங்கையின் ஜனாதிபதியாக வரக்கூடும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதற்கான தகுதிகள் தமக்குள்ளதாகவும், ஆனால் இறுதி முடிவை எடுக்க வேண்டியது மக்கள்தான் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எப்படியாயினும் தாம் அந்தப் பதவிக்கு வந்தால், IMF உடன்படிக்கையிலிருந்து விலகி, BRICS அமைப்பில் உறுப்பினராக இணைந்து ரஷ்யா,  சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சிப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அடுத்ததாக நாட்டை வழிநடத்த வர வேண்டியது ரணில் பின்பற்றிய பாதையில் செல்லும் தலைவரல்ல; மாற்று அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதையைத் தேர்ந்தெடுத்து நாட்டை முன்னேற்றக்கூடிய தலைவராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd