web log free
June 16, 2026

முருத்தெட்டுவே ஆனந்த தேரர் இப்போது யார் பக்கம்

தம்மைச் சேர்ந்த குழுவினர் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புபட்டவர்கள் அல்ல என்று முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த அரசுகளுடன் இணைந்து பணியாற்றியிருந்தாலும், எந்த அரசியல்வாதியின் பின்னாலும் சென்று தமக்கான காரியங்களை செய்து கொள்ளவில்லை என அவர் கூறினார்.

நாட்டில் நிலவும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், பல்வேறு பிரச்சினைகளை அதிகாரிகளிடம் முன்வைத்த போதிலும் அவற்றுக்கு தீர்வு கிடைக்காதமை குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“நாங்கள் எந்த அரசியல் கட்சியுடனும் இணைந்தவர்கள் அல்ல. கடந்த அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தோம். அந்த அரசாங்கத்தின் மூலம் பல வேலைகளைச் செய்துகொண்டோம். ஆனால் எந்த அரசியல்வாதியின் பின்னாலும் சென்று வேலை வாங்கவில்லை. எத்தனை பிரச்சினைகளை முன்வைத்தாலும் அவை பேர ஏரிக்கே போகிறதோ என்னவோ தெரியவில்லை. இதுவரை ஒன்றுக்கும் தீர்வு கிடைக்கவில்லை,” என்று தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd