web log free
June 17, 2026

இருக்கைப் பட்டை சட்டம் கட்டாயம்

ஜூன் 20ஆம் திகதி முதல் இருக்கைப் பட்டை (Seat Belt) சட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என தேசிய சாலை பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் மஞ்சுள குலரத்ன கூறுகையில், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பட்டை அணிவது கட்டாயம் என தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் முன்புறத்தில் மட்டுமல்லாது பின்புறத்தில் பயணிக்கும் பயணிகளும் இருக்கைப் பட்டை அணிய வேண்டும் என்பதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஒரு சலுகைக் காலமும் வழங்கப்பட்டிருந்தது.

அந்த சலுகைக் காலம் ஜூன் 19ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதன்படி, ஜூன் 20ஆம் திகதி முதல் இந்த சட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்படும் என தேசிய சாலை பாதுகாப்பு சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd