ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே நிறுத்தப்பட வேண்டும் என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதிக்கான மக்கள் செல்வாக்கு சஜித் பிரேமதாசவுக்கே உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
25 வருடங்களுக்கு முன்னால் இருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களுக்கு தங்களது ஜனாதிபதியை நியமித்துக்கு கொள்ள சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் ஒரு தடவை சர்வாதிகார ஆட்சி தலைதூக்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஜனரஞ்சகமான நபரை முன்னிறுத்தி அதனை தோல்வியடைய செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விருப்பத்துடனேயே சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.