web log free
June 28, 2026

கொழும்பில் வீடற்றவர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சிச் செய்தி!

கொழும்பில் சொந்த வீடின்றித் தவிக்கும் மக்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் வகையில், கொலன்னாவ பகுதியில் பிரம்மாண்டமான 12 மாடி வீடமைப்பு வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) பிரமாண்டமான நிதியுதவியுடன் சுமார் 5,784 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் மொத்தம் 624 வீடமைப்பு அலகுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வீடமைப்புத் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது இறுதி செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

அத்துடன், நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர குறித்த வீடமைப்புத் திட்டப் பகுதிக்கு நேரில் விஜயம் செய்து நிறைவடைந்த பணிகளைப் பார்வையிட்டுள்ளார்.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd