web log free
July 01, 2026

நிலக்கரி கொள்முதல் விசாரணை ஆரம்பம்

நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இன்று (01) முதல் சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை ஆரம்பிக்கிறது.

ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள 28 முறைப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கைகளை சமர்ப்பிக்க முறைப்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்று (30) நிறைவடைந்தது.

இந்த ஆணைக்குழு இதுவரை 100-க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது. இவர்களில் முன்னாள் அமைச்சு செயலாளர்கள் உள்ளிட்ட பல அரச அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

இலங்கையில் இடம்பெற்ற அனைத்து நிலக்கரி கொள்முதல் ஒப்பந்தங்களையும் விசாரிக்கும் நோக்கில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, கிஹான் குலதுங்க தலைமையிலான முழு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்திருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd