web log free
July 01, 2026

அஸ்வெசும பயனாளிகளுக்கு தவணை முறையில் குறைந்த விலை அரிசி

அஸ்வெசும நலத்திட்டப் பயனாளிகளுக்கு விரைவில் தவணை முறையில் குறைந்த விலையில் அரிசி வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

அரசின் அரிசி களஞ்சியங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல், அரிசியாக மாற்றப்பட்டு தேசிய சதொச என்ற புதிய பெயரின் கீழ் சந்தையில் விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அடுத்த கட்டமாக, அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20 கிலோகிராம் அரிசியை தவணை முறையில் வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, அஸ்வெசும நலத்திட்டப் பயனாளிகளுக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. எனினும், அரசு ஊழியர்களை விட அஸ்வெசும பயனாளிகளுக்கு சலுகை விலையில் அரிசி வழங்கப்படுவதுடன், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் முறையைப் போலவே தவணை அடிப்படையில் அரிசிக்கான கட்டணத்தை செலுத்தும் வசதியையும் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd