web log free
September 26, 2023

மரண தண்டனையை இரத்து செய்வதற்கான யோசனை

 

மரண தண்டனையை அமுல்படுத்துவதை இரத்து செய்வதற்கான யோசனையை, பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு ஆளும் கட்சி தீர்மானித்துள்ளது.

ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவரினால், தனிநபர் பிரேரணையாக இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர், மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆகையால், அதனை இரத்து செய்வதற்கான யோசனை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன.