web log free
April 05, 2026

ரிட் மனு மீண்டும் ஒத்திவைப்பு

மரண தண்டனையை அமுல்படுத்தும் யோசனைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை இரத்து செய்யுமாறு கோரி, ஊடகவியலாளர் மாலிந்த செனவிரத்ன தாக்கல் செய்திருந்த ரிட் மனுமீதான விசாரணையே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு, ஜூலை 02ஆம் திகதி ஆராயப்பட்ட போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டமா அதிபர் தப்புல டீ. லிவேரா “மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரிக்கும் அதிகாரம்​ மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இல்லை” என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

அத்துடன், இன்றைய தினமும் அவர் அதையே அவர் வலியுறுத்திய நிலையில், மனுமீதான விசாரண வௌ்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd