web log free
March 19, 2026

கான்ஸ்டபிளை தாக்கிய எம்.பியின் மகனுக்கு பிணை


ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமார ​அபேசேகரவின் மகனான, இஷார சத்துரங்க அபேசேகர (வயது 26) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் மஞ்சுள ரத்னாயக்கவின் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே, பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்த நீதவான், மேலதிக விசாரணைக்காக 2020ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது தாக்குதல் நடத்தினார் என்றக் குற்றச்சாட்டில், அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd