web log free
October 01, 2023

பாடசாலைக்குள் நுழைய முயன்றவர் பலி


அக்மீமன பகுதியில் பாடசாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைவதற்கு முற்பட்ட நபர் ஒருவர் மீது, அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்தவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

அதில் படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.