web log free
March 17, 2026

ஒரு நாள் சேவை இன்று இரத்து

தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொடுக்க முன்னெடுக்கப்படும் ஒருநாள் சேவை இன்று இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக இந்த சேவை இன்று ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

கணினி பிரிவில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே இன்றைய தினம் ஒரு நாள் சேவையை வழங்கமுடியாத நிலை ஏற்பட்டதுடன், ஒரு நாள் சேவையை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd