web log free
February 15, 2026

'மொட்டு உறுப்பினர்கள் விரைவில் கைது'

 

மாகந்துரே மதுஸ் வெளிப்படுத்தியுள்ள தகவல்களுக்கு அமைய, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என, அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அஸ்கிரி பீட மகாநாயக்க தேரரான வணக்கத்துக்குரிய வரகாகொட ஞானரத்தன தேரரை நேற்று பிற்பகல் சந்தித்த போது, கருத்து வெளியிடுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

2015ஆம் ஆண்டு முதல் இதுவரை முன்னெடுத்துள்ள சுகாதார சேவைகள் தொடர்பில் அமைச்சர் எடுத்துரைத்த நிலையில், அவரது வேலைத்திட்டத்தை மதிப்பதாக மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd