web log free
February 05, 2026

'தேசிய பாதுகாப்புக்கு பிரச்சினை இல்லை’


ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட பயங்கரவாத அமைப்பு தற்போது இலங்கையில் அழிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை ஆனந்த பிரிவெனாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிக்குகளுக்கான இரண்டு மாடி தங்குமிட விடுதியை மகா சங்கத்தினரிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி நேற்று இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களுடன் அனைத்து மக்களும் தெளிவுடன் வாழக்கூடிய அமைதியான நிலைமை ஒன்று நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் எதிர்பாராத நிலைமை ஒன்று நாட்டில் உருவானபோதும் தற்போது மீண்டும் நாட்டில் அமைதியான சூழல் ஒன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd