இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒப்பந்தங்கள் ஊடாக இலங்கையின் இறையாண்மைக்கு எந்தவித்திலும் பாதிப்புகள் ஏற்படாது என, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைய்னா டெப்ளிஸ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கையில், அமெரிக்க முகாம்களை ஏற்படுத்துவதற்கான எந்த எதிர்பார்ப்பும் கிடையாது என்றும் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மாத்திரம், பயிற்சி, அனர்த்தங்கள் போன்ற சந்தர்ப்பங்களில் மாத்திரம் இணங்கிச் செயற்படுவதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.