web log free
April 05, 2026

சோபாவில் அரசாங்கம் கையெழுத்திடாது - ஐதேக வாக்குறுதி

அமெரிக்க அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் சோபா உடன்பாட்டில் கையெழுத்திடாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
ஐதேகவின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷ விதானகே நேற்று அலரி மாளிகையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் கூறியுள்ளார்.

அதேவேளை, பிரதமர் செயலகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டை செய்து கொள்வது தொடர்பான எந்த முன்மொழிவும் பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

“அமெரிக்காவுடன் சோபா உடன்பாட்டை செய்து கொள்ளும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.” என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd