web log free
October 01, 2023

வயலில் பயணிக்கும் பஸ்

 

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட றொட்டை வயல் பிரதேசத்தில்,பொத்துவில் டிப்போக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று வீதியை விட்டு விலகி, நேற்று (09) காலை வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.


கதிர்காமத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அக்கரைப்பற்றுக்கு சென்ற பஸ். பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் பயணித்துக் கொண்டிருந்த வேளை, நேற்றுக்காலை 5:30 மணியளவில் வீதியை விட்டு விலகி வயலுக்குள் சென்று விபத்துக்குள்ளானது. பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தினால் பயணிகளுக்கு எவ்விதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்