web log free
October 01, 2023

இன்று 24 மணி நேர நீர் வெட்டு

 

ஹோகாந்தர பகுதியில் இன்று (10) முற்பகல் 9 மணிமுதல் 24 மணித்தியால நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.

அத்துடன், கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவல, மாநகர சபை எல்லை பகுதிகளுக்கும் மாகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ ஆகிய நகர சபை பிரதேசங்களுக்கும் குறித்த காலப்பகுதியில் குறைந்த அளவில் நீர்விநியோகம் இடம்பெறம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொட்டிகாவத்த, முல்லேரிய ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று முற்பகல் 9 மணிமுதல் 24 மணித்தியாலங்கள் குறைந்த அளவில் நீர் விநியோகம் இடம்பெறும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது.