web log free
April 05, 2026

பதவியில் இல்லாதவர்களுக்கு புதிய அமைப்பு

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான அமைப்பினை உருவாக்குமாறு முன்னாள் உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்களுடன், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலம் மற்றும் அதற்கு முந்தைய காலப்பகுதியில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகளை வகித்து தற்போது நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களாக பதவி வகிக்காதவர்களை பிரதிநித்துவப்படுத்தும் வகையில் அமைப்பினை உருவாக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd