அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்தமை தொடர்பில், ஒன்றிணைந்த எதிரணி மீது மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்துக்கு ஒன்றிணைந்த எதிரணி தொடர்ந்து எதிர்ப்பு வெளியிடும் என்றும், அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுக்கும் என, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.