web log free
March 30, 2026

'கோட்டாவே ஜனாதிபதி வேட்பாளர்'

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிறுத்தப்படுவார் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்தரசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள அனைவரினதும் ஒத்துழைப்பு இதற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியால் தற்போதுவரை வேட்பாளர் ஒருவரை தேடிக்கொள்ள முடியவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd