web log free
October 01, 2023

“வாக்குகளுக்காகவே மரணதண்டனை”

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச சகல
சந்தர்ப்பங்களிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேவைகளையே
நிறைவேற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்
பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர்
இதனைக் கூறியுள்ளார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், “ வாக்குகள் தேவை என்பதால்
சிறையில் உள்ள மனிதர்களை தூக்கில் போட முயற்சிக்கின்றனர். அது மிகவும்
கீழ்த்தரமான செயற்பாடாகும். மரண தண்டனைக்கு எதிராகவே எமது கட்சி
உள்ளது. அதே நிலைப்பாட்டில்தான் நாங்களும் உள்ளோம். எனினும்,
அமைச்சர் சஜீத் பிரேமதாச, ஜனாதிபதிக்கு சோடை போயுள்ளார். அவர்
ஜனாதிபதி கூறும் விடயங்களை தான் ஏற்றுக்கொள்கின்றார்.” என்றார்.