web log free
May 31, 2026

புதிதாக மூவருக்கு அமைச்சுப் பதவிகள்

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று (11) சத்தியப்பிரமாணம் செய்தனர்.

விசேட பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக வீ.இராதாகிருஸ்ணனும், தொ​ழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சராக ரவிந்திர சமரவீரவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சராக அப்துல் மஹ்ருப் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, தயா கமகேவுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சுப் பதவியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய, அவர் சமூக வலுவூட்டல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd