web log free
October 01, 2023

“வேலைத்திட்டங்களை தடுக்க முடியாது”

அரசாங்கத்துக்கு எதிரான அணியினர் பல்வேறு வழிகளில் இடையூறுகளை
ஏற்படுத்தினாலும், அரசாங்கத்தினால் மக்களுக்கு
பெற்றுக்கொடுக்கப்படவேண்டிய மானியங்களை மக்களுக்கு வழங்குவதை
தவிர்க்க முடியாது என, அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

மொரவக்க பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துகொண்ட போது
அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அபிவிருத்திக்கான சிறந்த
அடித்தளமொன்றை இட்டு அனைவருக்கும் நீதியான முறையில் சந்தர்ப்பங்கள்
கிடைக்கும் நாடாக இலங்கையை கட்டியெழுப்ப நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.