web log free
May 23, 2026

தங்க துப்பாக்கி ஜனாதிபதிக்கு பரிசு

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைத்துள்ள பரிசுகளில் தங்க துப்பாக்கியொன்றும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அந்தத் துப்பாக்கி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருந்தபோது, பாகிஸ்தான் ஜனாதிபதியினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

அந்தத் துப்பாக்கி உட்பட, தனக்கு பரிசாக கிடைத்த பெறுமதி வாய்ந்த சகல பரிசுகளையும், பொலன்னறுவையில் திறக்கப்படவிருக்கும் அருங்காட்சியகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என அறியமுடிகிறது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd