web log free
November 27, 2024

“உ/தவுக்குப் பின் இராணுவப் பயிற்சி வழங்கவும்”

இலங்கையில் ஒரே இனத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின், எதிர்காலத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்த்தரப் பரீட்சை எழுதி, சித்தியடைந்த சகல இலங்கை மாணவர்களுக்கும் இராணுவப் பயிற்சி வழங்கப்படவேண்டும். அதேபோல, இலங்கையின் வரலாற்றையும் அவர்களுக்கு கற்பிக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். 

அனுராதபுரத்தில் நேற்று (15) இடம்பெற்ற, வர்த்தக சமூகத்தினருடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்தார். 

அங்கு அவர் தொர்ந்து உரையாற்றுகையில், 

சாபி சஹாப்தீன் சம்பவம், சஹ்ரான் சம்பவம் போலன்று. தற்கொலைக்குண்டுதாரிகள் எட்டுப்போர் ஒரே நேரத்தில் வந்தனர். மக்களை கொன்றொழித்தனர். சாபி சஹாப்தீன் என்பவர், சிங்கள மக்களுடன் நன்றாக பழகி, மச்சான் என்றழைத்து உபாயமான முறையில், சிங்க பெண்களுக்கு கருத்தடை செய்தவர் என்றும் ரத்ன தேரர் தெரிவித்தார். 

 

தற்போதைக்கு, 900க்கும் மேற்பட்ட சிங்களப் பெண்களுக்கு அவர், கருத்தடை செய்துள்ளார்.  நாங்கள் அறிந்து வைத்திருக்காவிடின் இவ்வாறானவர்கள் விடுதலை பெற்றுவிடுவிர். இவ்வாறானவர்கள் இலங்கையில் இருப்பார்களாயின், இன்னும் 20 வருடங்களில், இலங்கையில் சிங்கள மக்கள், கருத்தடைக்கு உள்ளாகிவிடுவர். இவ்வாறான வேலைகளைச் செய்வதற்கு சவுதியிலேயே பணம் கொடுக்கப்பட்டுள்ளது.

சாபி சஹாப்தீனின் வங்கி கணக்கு வழக்கு முறையாக சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. நல்லவேளை, நம்முடைய நீதிமன்றம் நியாயமானதாக இருந்தமையால், இவையாவும் அம்பலத்துக்கொண்டுவரப்பட்டது. இல்லையென்றால், சிங்களவர்கள் பாவப்பட்ட ஜென்மங்களாகிவிடுவர். 

 

ஆகையால் மதப்பிரிவினைவாதிகளை நாங்கள் இனங்கண்டுகொள்ளவேண்டும். மத்ரஸாவில் கற்பிக்கின்றவர்கள் 30ஆயிரம் பேர் உள்ளனர். அவர்கள்தான் இறுதியில் பிரிவினைவாதிகளாகிவிடுகின்றனர். 

புத்தர் சிலைகளை உடைக்கவேண்டும். அல்லஹா மட்டுமே இருக்கவேண்டும். பௌத்த தர்மத்தை கற்பிக்கின்றவர்கள் முட்டாள்கள் என அல்லாஹ் சொல்லியிருக்கின்றார்.  அவ்வாறானவர்களை கொன்றொழித்தால் பரவாயில்லை. நாங்கள் எல்லோரும் சுவர்க்கத்துக்கு சென்றுவிடுவோம் என்ற போதைகளை மதரஸாக்களே போதிக்கின்றன. அவற்றை இல்லாமற் செய்யவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd