web log free
April 23, 2026

நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்க முயற்சி

அரசாங்கத்தின் காலம் தற்போது நிறைவடைந்துள்ளதுடன், இன்னும் சில மாதங்களில் தேர்தலுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு தற்போது முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைத்துள்ளது போல ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் தேர்தலை நடத்த முடியாவிட்டால் நாடாளுமன்றத்தை கலைத்துவிடுமாறும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd