web log free
February 05, 2026

'தாக்குதல்தாரிகளுக்கு மரண தண்டனை'

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு, எதிரான சாட்சிகள் தெளிவாக இருப்பதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டத்துக்கு அமைய அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெலந்த ரஜமஹா விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், தாக்குதல் சம்பவத்துடன், தொடர்புடைய அனைவரும் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd