web log free
November 27, 2024

பூஜித் ஜயசுந்தரவிடம் இன்றும் வாக்குமூலம்


பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இன்றும் குற்றப்புலனாய்வு துறையினர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இன்றைய தினமும் வாக்குமூலம் பெற்றுக்கொண்டதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

குறித்த வழக்கினை ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் இவர்கள் இருவரும் கடந்த 03ம் திகதி கைதுசெய்யபட்டனர்.

பின்னர், கடந்த 9ஆம் திகதி இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd