நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்திலும் நிறுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
கஹவத்தவில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் கூறியிருக்கின்றார்.
அவர் அங்கு உரையாற்றுகையில்,
“நாங்கள் எப்போதும் பௌத்தத்தை மதிக்கிறோம். நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு எந்ததவொரு நல்ல பௌத்தருமோ, அல்லது நாட்டின் எந்தவொரு பகுதியுமோ விரும்பவில்லை.
நாட்டில் நிலவிய மோசமான போரை, தமது வியர்வையையும் இரத்தத்தையும் சிந்தி முடிவுக்கு கொண்டு வந்து நாட்டைப் பாதுகாத்த போர் வீரர்களை எந்தவொரு நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்வற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம். இவையெல்லாம் பொய்யான பிரசாரங்கள்” என்றார்.