web log free
June 24, 2026

ஹதுருசிங்கவை பதவி நீக்க தீர்மானம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திக ஹதுருசிங்க உள்ளிட்ட பயிற்சியாளர்கள் குழுவை தங்களது பதவிகளில் இருந்து விலகுமாறு அறிவிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற நிர்வாக சபை கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய பயிற்சிவிப்பாளர்களின் பதவி காலத்தை நீடிக்காமல் இருப்பதற்கும் முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் அணியுடனான தொடரின் பின்னர் இலங்கை அணிக்கான அனைத்து பயிற்சிவிப்பாளர்களையும் நீக்குமாறு விளையாட்டு துறை அமைச்சர் இலங்கை கிரிக்கெட் சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd