web log free
June 24, 2026

நுவன் குலசேகர ஓய்வு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இலங்கை கிரிக்கட் அணியின் வேகபந்து வீச்சாளர் நுவன் குலசேகர தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பில்,இன்று மாலை இடம்பெறவுள்ள விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

188 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய நுவன் குலசேகர 199 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளதுடன் 21 டெஸ்ட் போட்டிகளில் 48 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இருபதுக்கு இருபது 58 போட்டிகளில் 66 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd