முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் விசேட மேல் நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் தடையுத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கே உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மெதமுலன டீ.ஏ ராஜபக்ஷ, நினைவு அருங்காட்சியகத்தை நிர்மாணிக்கும் போது, அரச நிதியான 33.9 மில்லியன் ரூபாயை மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ், குறித்த வழக்கு விசேட மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றது.