web log free
April 05, 2026

வைத்தியர் ஷாபி பிணையில் விடுதலை


குருநாகல் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் குருநாகல் நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அசாதாரண முறையில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று மூன்றாவது தினமாகவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

250,000 ரூபாய் ரொக்கப்பிணை மற்றும் 25 இலட்சம் ரூபாய் சரீர பிணைகள் நான்கின் அடிப்படையில் வைத்தியருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எவ்வித எதிர்ப்பும் வெளியிடப்படாத நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd