web log free
May 03, 2026

பட்டதாரிகளுக்கு இன்று நியமனம்

பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கு அரசதுறையில் நியமனம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 16800 பேருக்கு நியமனம் வழங்கும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணிக்கு அலரி மாளிகையில் ஆரம்பமாகவுள்ளது.

3,800 பட்டதாரிகளுக்கு இன்றைய தினம் அலரிமாளிகையில் வைத்து நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெரிவு செய்யப்பட்ட ஏனைய பட்டதாரிகளுக்கும் நாளை முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதிக்குள் நியமனம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை வழங்கியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd