web log free
April 16, 2026

ஐ.தேக உறுப்பினர்கள் மொட்டுடன் கைகோர்ப்பு?


எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அரசியல்வாதி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொள்வார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் 11ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் குழுவினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd