ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடுகிறது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கபில வைத்தியரத்ன, இன்று சாட்சி வழங்கவுள்ளார்.
அத்துடன், இராணுவ தளபதி லெஃப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவும் மீண்டும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளார்.
இதவேளை, நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் எதிர்வரும் 6ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையாகி சாட்சி வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன், அமைச்சர்களான சாகல ரத்நாயக்க மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும், ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தனவும் சாட்சி வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான யோசனை இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.