web log free
April 06, 2026

மொட்டு-கையில் சலசலப்பு

தாமரை மொட்டு சின்னத்தை கொண்ட பொதுஜன பெரமுன, கையை சின்னமாகக் கொண்ட சுதந்திரக் கட்சிக்கு இடையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு செல்லவேண்டாமென சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர், பொதுஜன பெரமுனவின் மேடையில் எதிர்வரும் 11ஆம் திகதி ஏறுவர் என பெரமுனவின் எம்.பி மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். 

எனினும், பொதுஜன பெரமுனவின் மேடையில் ஏறும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி தெரிவித்துள்ளார். 

ஆகையால், யார், யார் போகப்போகின்றனர். யார் யார் வரப்போகின்றனர் என்பது தொடர்பில் இரு கட்சிக்களின் உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd