web log free
May 11, 2025

முத்தலாக் முறைக்கு தடை

சமத்துவமற்ற முத்தலாக் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். இன்று முத்தலாக் தடை சட்ட மசோதா ராஜ்யசபாவில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் முத்தலாக் நடைமுறை கிரிமினல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு 99 எம்.பிக்கள் ஆதரவளித்தனர். 84 எம்.பிக்கள் எதிர்த்தனர். 


லோக்சபா மற்றும் ராஜ்யசபா இரண்டிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் இந்த சட்டம் குடியரசுத் தலைவர் அனுமதி உடன் அவசர சட்டமாக இயற்றப்பட்டு நடைமுறையில் இருந்தது. இரண்டு முறை இது அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருந்தது. கடைசியில் தற்போது வெற்றிகரமாக இந்த மசோதா இரண்டு அவையிலும் தாக்கல் செய்யப்பட்டு சட்டமாகி உள்ளது. இதுகுறித்து தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டிவிட் செய்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd