ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக்கூட்டத்தில், புதிய முன்னணியை அமைப்பதற்கான யாப்புக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் அங்கிகாரம் வழங்கிய போதிலும், ரணில் யோசனையை சஜித் பிரேமதாஸா தவிடுபொடியாகினார்.
சஜித்துடன் இணைந்து 12 பேர், கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால், எவ்விதமான இணக்கப்பாடும் இன்றி, கூட்டம் நிறைவடைந்தது. எனினும், எதிர்ப்பவர்கள் தங்களுடைய திருத்தத்தை எதிர்வரும் 5ஆம் திகதிக்கு முன்னர், கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிமுக்கு வழங்குமாறு ரணில் அறிவுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழுக்கூட்டம், அலரிமாளிகையில், நேற்று (01) பிற்பகல் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர்களான சஜித் பிரேமதாஸ, கபீர் ஹாசிம், மங்கள சமரவீர, மலிக் சமரவிக்கிரம, ரஞ்சித் மத்தும பண்டார, தலதா அத்துகோரள, ரவி சமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சுஜீவ சேரசிங்ஹ, அஜித் பி பெரேரா, இரான் விக்ரமரத்ன, திலிப் வெதஆராச்சி மற்றும் நளின் பண்டார ஆகியோர், ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்புக்கு கடுமையாக எதிர்த்தனர்.