கொழும்பு அரசியலில் என்னனென்ன நடக்குமோ என்பதெல்லாம். இன்னும் இரண்டொரு வாரங்களுக்குள் அம்பலமாகிவிடும்.
இதில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் உட்பூசல்கள் ஆரம்பிக்க தொடங்கிவிட்டன.
சஜித் பிரேமதாஸாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு அக்கட்சிக்குள் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
ஆகையால், காய்நகர்த்தல்களை ரணில் விக்கிரமசிங்க மிகக் கச்சிதமாக முன்னெருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், மின்சார அமைச்சர் ரவி கருணாநாயக்க, அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க காத்திருக்கிறார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித் பிரேமதாஸாவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால், ஒருதொகை எம்.பிக்களுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்து விடுவேன் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார் என ஆளுந்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.