ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையின் கீழ் புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் களமிறங்கும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதற்கான ஒத்துழைப்பை ஹக்கீமிடம் கோரிநின்றார் ரணில்.
எனினும், வேட்பாளர் யாரென்பதை முதலில் அறிவியுங்கள். அதன்பின்னர், தங்களுடைய நிலைப்பாட்டை அறிவிக்கின்றேன் என ஹக்கீம், எடுத்த எடுப்பிலேயே தெரிவித்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.