web log free
May 09, 2025

மதுபான கடைகளுக்கு 10 நாட்களுக்கு பூட்டு

வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு கண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபானக் கடைகளும் ஒகஸ்ட் 5 முதல் 15 வரை மூடப்படவுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கண்டி கங்கவத்த கொரெல்ல பிரதேச செயலகம், பேராதனை, கட்டுகஸ்தோட்ட, அலதெனிய, அம்பதென்னா, மடவல, மெனிக்கின்ன, திகன மற்றும் தலத்துஓயா ஆகிய பகுதிகளில் உள்ள உரிமம் பெற்ற அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளது.

இந்த பகுதிகளை மதுபான பாவனையற்ற பகுதியாக மாற்ற முடிவு செய்திருப்பதாக கலால் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இத்துடன் , ஸ்ரீ தலதா மாளிகையில் இருந்து 8 கிலோ மீற்றர் சுற்றளவில் உள்ள சில்லறை உரிமம் பெற்ற மற்றும் சிறப்பு உரிமம் பெற்ற மதுபானசாலைகள் அனைத்தும் கண்டி பெரஹராவின் போது மூடப்பட உள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd