web log free
February 04, 2026

கசிப்பு கசந்தது- ஒருவர் பலி, 10 பேர் பாதிப்பு

சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) அருந்திய நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். மேலும் 10 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுராகொட பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கசிப்பு விஷமாகியதால், அவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவருடைய சடலம்,  வத்தேமுல்ல பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

மதுபானம் அருந்தியதன் பின்னர் குறித்த நபர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு ஆகிய உபாதைகள் ஏற்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத மதுபானம் அருந்தி நோய்வாய்ப்பட்ட மூன்று பேர் திவுலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மூன்று பேர் கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் மீரிகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd