கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பமாவதுடன், ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாடு தழுவிய ரீதியில் இரண்டாயிரத்து 678 பரீட்சை மத்திய நிலையங்களில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். 315 பரீட்சை இணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை தொடர்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்திட்யசகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அண்மையில், நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் துணையுடன் பொலிஸ் மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்கு மத்தியில் பரீட்சைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.